திடீரென வந்த வாக்காளர்கள்: 8:45 மணி வரை நடந்த வாக்குப்பதிவு

திடீரென வந்த வாக்காளர்கள்: 8:45 மணி வரை நடந்த வாக்குப்பதிவு
X
நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் இறுதி நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால், 8:45 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கனாங்குப்பம் கிராமத்தில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், அங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.

காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு மேல் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

மேலும் 5 மணியளவில் வாக்குச்சாவடி மையத்தின் கேட்டை காவல் துறையினர் மூடியதால், காவல் துறைக்கும் வாக்காளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வெளியில் காத்திருந்த வாக்காளர்களை வாக்களிக்க உள்ளே அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைச் செலுத்தினர்.7:30 மணியைக் கடந்தும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 8:45 மணிக்கு நிறைவு பெற்றது.

மேலும் அடுத்த முறை தேர்தல் நடைபெறும்போது, அதாவது கூடுதலாக வாக்குச்சாவடி மையங்களை அமைத்து வாக்காளர்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!