திருப்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளரின் மகன் போக்சோ சட்டத்தில் கைது
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியைச் சார்ந்த அன்பழகன் (52). இவர் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனோஜ் குமார் ( வயது 21) என்ற மகன் உள்ளார்.
கந்திலி அடுத்த மானவள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சம்பத் மகள் திவ்யா ( வயது16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சம்பத்தின் மருமகன் சிவானந்தன் மத்தூர் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். திவ்யாவை மருமகன் சிவானந்தன் காவலர் குடியிருப்பு வீட்டில் பெற்றோர்கள் விட்டுச் சென்றுள்ளனர்
இந்த நிலையில் திருப்பத்தூர் காவல் குடியிருப்புப் பகுதியில் மனோஜ் குமார் தங்கியுள்ளார். அப்போது மனோஜ்குமார் மற்றும் திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக காதல் வலையில் விழுந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோருக்கு தெரிய வர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மனோஜ் குமார் பெற்றோரின் பெண் வீட்டார் கேட்கையில், 30 சவரன் நகை மற்றும் கார் வரதட்சணையை கொடுத்தால் மட்டுமே மகனை திருமணம் செய்து தருவதாக கூறியுள்ளனர். மேலும் காவல் அதிகாரி நீ எந்த புகார் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள் என்று அதிகார தொனியிலும் பேசியுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் 16 வயது பெண்ணை காதல் செய்வதாக கூறி ஏமாற்றி வருகிறார் என திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை விசாரித்த மகளிர் காவல் நிலைய போலீசார் மனோஜ் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய சம்பவம் காவலர் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu