திருப்பத்தூரில் மதுக்கடை திறப்பை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மதுக்கடை திறப்பை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
X

திருப்பத்தூரில் மதுக்கடை திறப்பை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மதுக்கடை திறப்பை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமகவினர் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் நகர் அருகே தனியார் கல்லூரி எதிரில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர் பொன்னுசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பியும் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதேபோல் ஆதியூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி. கே ராஜா தலைமையில் மதுக்கடை திறப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!