திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
X

திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ரத்ததானம் நடந்தது.

திருப்பத்தூர் தாலுகா பள்ளத்தூர் கிராமத்தில் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு கல்லூரி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ப.நரசிம்மன், வரவேற்று பேசினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் மு.சந்தோஷ்குமார், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார். காவல் உதவி ஆய்வாளர் கோதண்டன், ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவோம், பிளாஸ்டிக் பைக்கு மாறாக துணிப்பையை பயன்படுத்துவோம், இயற்கையை பின்பற்றி வாழ்வோம், வாழ்நாளில் முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு மாணவர்கள் சென்றனர். முடிவில் பேராசிரியர் மா.பிரகாசம் நன்றி கூறினார்.

சந்திரபுரம் ஊராட்சியில் மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் செந்தில் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜவஹர்லால் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கவிதா வரவேற்று பேசினார். இதல் ரத்த பரிசோதனை, கண் சிகிச்சை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் 24 பேர் ரத்ததானம் செய்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் கலைச்செல்வி, உதவி பேராசியர்கள் கோபால், யாழனி, மகேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil