திருப்பத்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பத்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா
X

மரக்கன்றுகள் நடும் விழாவை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி துவக்கி வைத்தார்

திருப்பத்தூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி துவக்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் வார விழாவை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 300 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை துவக்கி வைத்தனர் .

அப்போது பொதுமக்கள் இடையே சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர் இக்கிராமத்தில் நாளை தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் எவ்வித அச்சமுமின்றி தடுப்புசி செலுத்தி கொள்ளுமாறு கூறினார் இதில் கந்திலி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்

Next Story
ai platform for business