பள்ளி குழந்தைகளுக்கு பாதை விடாமல் அராஜகம்: நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
சாலை ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த மாணவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சின்னமோட்டூர் கேதாண்டப்பட்டி பகுதியைச் சார்ந்த முருகன் மகன் ஜோதிலிங்கம் காலங்காலமாக பயன்படுத்திய தார் சாலை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் காளையன் வட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் பல வருட காலமாக பயன்பாட்டில் இருந்த தார் சாலையை முருகன் மகன் ஜோதிலிங்கம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, இந்த தார் சாலையின் வழியாக எவரும் வரக்கூடாது பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை அடித்துத் துன்புறுத்துவதும், அதையும் மீறி பயணித்தால் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
தார்சாலை 24 வருடத்திற்கு முன்பு முறைப்படி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் போடப்பட்டது. 12 வருடத்திற்கு முன்பு இரண்டாவது முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் சாலையை ஜோதிலிங்கம் ஆக்கிரமிப்பு செய்து அராஜகப் போக்கிலல் ஈடுபட்டு வருகிறார்
இதன் காரணமாக ஜோதிலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுத்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தச் சாலையை மீட்டு தரவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர்கள் உடன் வந்து மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu