நிலத்தை அபகரிக்க முயலும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

நிலத்தை அபகரிக்க முயலும்  தனிநபர் மீது  நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
X

நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வந்தவர்

ஜோலார்பேட்டை அருகே நிலத்தை அபகரிக்க முயலும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வஜ்ஜிரம் மனைவி கோவிந்தம்மாள் இவருக்கு சொந்தமாக 21/13B சர்வே எண் கொண்ட 14.¾ சென்ட் அளவிலான நிலம் உள்ளது.

இதன் காரணமாக இவருடைய வீட்டைச்சுற்றி சுற்றுச்சுவர் எடுக்க முயற்சித்துள்ளார் இந்த நிலையில் இவர் வீட்டில் அருகே உள்ள ராஜகோபால் மகன்கள் செல்வராஜ் மற்றும் மகேந்திரன் சுற்றுச்சுவர் எடுக்க தடை செய்வதாகவும் அந்த நிலம் எனக்கு சொந்தம் எனவும் பலமுறை தகராறில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் கோவிந்தம்மாள் தனது நிலத்தை மீட்டு தரக்கோரி ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்க வருவதாகவும் மகேந்திரன் மற்றும் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்