திருப்பத்தூர் அருகே காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்

திருப்பத்தூர் அருகே காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்
X

வெள்ளத்தில் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர்

திருப்பத்தூர் அருகே காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு செடிகளில் சிக்கி இருந்த நபரை அப்பகுதி மக்கள் மீட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டில் அடுத்த பாம்பாறில் இருந்து கிளை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட கொரட்டி அடுத்த மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் ஆபத்தை உணராமல் இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்றபோது சற்றும் எதிர்பாராத விதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். .

பின்பு அருகில் இருக்கக்கூடிய செடிகளில் சிக்கி இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது..

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!