/* */

கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பலி

திருப்பத்தூரில் இரவு பெய்த கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பலி

HIGHLIGHTS

கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பலி
X

வீடு இடிந்து விழுந்ததில் பலியான ராமன் 

வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இரவு திடீரென கனமழை பெய்ய தொடங்கியது

திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமன் (42) என்பவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

அதுமட்டுமின்றி கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அதே பகுதியில் உள்ள அவருடைய அம்மா வீட்டில் பிள்ளைகளுடன் தனிக்குடித்தனம் சென்று வசித்து வந்ததாக தெரிகிறது. எனவே ராமன் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு முதல் விடியற்காலை வரை பெய்த கனமழையால் ராமனுடைய வீட்டின் இருபக்கச் சுவர்களும் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். காலை அக்கம்பக்கத்தினர் பார்த்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...