அரசியல் செய்வதற்காக முதல்வர் மீது குற்றம் சாட்டுகின்றனர்: அமைச்சர் வேலு
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் வேலு
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ வேலு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகின்றனஎன கேட்டரிந்து அந்தப் பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் என்று கூறினார்.
அதே நேரத்தில் தற்போது இந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது ஆகையால் ஒவ்வொரு ஊராட்சியிலும் தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி அந்தந்த ஊராட்சிக்கு முழுமையாக அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, தமிழக முதல்வர் அவர்கள் ஒரு மாத காலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு வடகிழக்கு பருவ மழை முழுமையாக கையாள வேண்டும் என வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
மேலும் சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 23 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகி இருக்கின்றது. ஒரு சில இடத்தில் தாழ்வான இடத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது அதையும் நேரில் சென்று ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்த முதல்வர் உத்தரவிட்டு இருக்கின்றார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றார்
ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் அரசியல் செய்வதற்காக முதல்வர் மீது குற்றம்சாட்டி உள்ளார் எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu