வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

வெளிமாநிலத்திற்கு கடந்த இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் இருப்பினும் கள்ளத்தனமாக கடத்தல்காரர்கள் அதிகாரியின் கண்ணில் படாமல் கடத்தல் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோகன் மகன் அண்ணாமலை 1 டன் அளவிலான ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பத்தூர் கிராமிய போலீஸாருக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் அகிலன் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த 1 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அண்ணாமலை போலீசார் வருவதை அறிந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்வோர் வணிக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!