திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு
X

திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் வேலு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 32 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அரசினர் தோட்ட பகுதியில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை போன்ற துறைகளின் கீழ் 3660 பயனாளிகளுக்கு 32 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.கே சூரியகுமார் தனது பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், அனைத்து துறை அரசு அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!