திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆய்வு கூட்டம்
திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தனியார் தொண்டு நிறுவனம் வழங்கியது அதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அலோபதி மருத்துவத்துக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் தற்பொழுது இந்திய மருத்துவ முறையான சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 52 இடங்களில் சித்தமருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக வாணியம்பாடியில் யூனானி சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக சரிந்து கொண்டு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்னமும் வேகமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 69 ஆயிரத்து 413 பேருக்கு ஆட்சி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது ஒன்றுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 700 பேருக்கு ஆர் சி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 257பரிசோதனை மையங்கள் தற்போது 769 பரிசோதனை மையங்களாக அதிகரித்துள்ளது.
மேலும் காய்ச்சல் இருமல் சளி ஆகியவற்றைக் கண்டறிய வீடுகள் தோறும் சென்று களப்பணியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மார்ச் மாதத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 540பேருக்கு மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. தற்போது மே மாதத்தில் மட்டும் 10 லட்சத்து 51 ஆயிரத்து நானூற்று மூன்று பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு இந்த வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அனைத்து திட்டங்களையும் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுத்தி வருகிறது. எனவே வரும் 15 நாட்களில் வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என்று தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் என அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu