திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலக கட்டட பணி: அமைச்சர் எ.வ வேலு ஆய்வு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் புதிய கட்டிட பணிகளை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு செய்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கட்டுமான பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் கட்டடப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து ஒப்பந்ததாரர் இடமும் கட்டிட பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25 துறை அதிகாரிகள் பணி செய்யக் கூடிய வகையில் இந்த கட்டிடம் அமைய உள்ளது. வாணியம்பாடியில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் மாவட்ட தலைநகரில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைப் பணியாளர்கள் எத்தனை கிலோ மீட்டருக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்தவுடன் முதல் அமைச்சரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலை துறையில்யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அண்மையில் ஒரு மாவட்டத்தில் சாலையில் போட்ட உடனேயே தரமானதாக இல்லை என தெரிவித்த உடன் அந்த மாவட்டத்தில் 3 அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே நெடுஞ்சாலைத் துறையில் தரமான சாலைகளை போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இத்துறையில் யார் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்
இந்த ஆய்வின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் மற்றும் பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகள் என பலருடன் உள்ளனர்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu