திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏலகிரி மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து முத்தானூர் கிராமத்திற்கு செல்லும் அமைக்கப்பட்டு உள்ள சாலை பார்வையிட்டு ஆய்வு செய்து பொன்னேரி பகுதியில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழு மூலம் கோரப்பாய் தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக ரெட்டியூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேல் நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தரமான நீர்தேக்க தொட்டியை கட்டவில்லை என அதிகாரிகளுக்கு முறையாக இதனை கட்ட உத்தரவிட்டார்.
மேலும் திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள சமத்துவபுரம் பகுதியை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை பார்வையிட்டு பின்னர் 60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்:
தற்போது நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்து அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்கி திட்டங்களை முழுமையாக மக்களிடம் சென்றடைய தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் நேரடியாக களத்தில் ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கைகளை படிப்படியாக எடுக்கப்படும். மக்களுக்கான வாழ்வாதாரத்தை திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தப்படும். வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தாக்க திட்டம் உள்ளன ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் திணறினார். பின்னர் அருகிலிருந்த அதிகாரியிடம் கேட்டு தற்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டம் இதனால் விரைவில் அந்த திட்டத்தை மாவட்டத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சி எடுப்பதாக கூறினார்..
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர் கோபால், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அதிகாரிகள் வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu