திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
X

திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் வெல்டிங் பணியில் மின்சாரம் தாக்கி உயிரழந்த முத்து 

திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் வெல்டிங் பணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த அத்தியூர் பகுதியை சார்ந்தவர் முத்து. இவர் சிறிய வெல்டிங் ஒர்க்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இன்று திருப்பத்தூர் ஆசிரியர் நகரில் தனியார் தூய நெஞ்சக் கல்லூரியில் அடுக்குமாடி கட்டிடத்தில் வெல்டிங் வைப்பதற்காக காலை 9 மணி அளவில் கல்லூரி இரண்டாவது மாடியில் பணி செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த கவியரசன் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து அங்கு வந்த திருப்பத்தூர் நகர போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இறந்துபோன முத்துவிற்கு ஜெயசுதா என்ற மனைவியும் நந்தினி ( வயது 9) மோனிஷா (வயது 4) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!