காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
X

கிராமிய காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜம்மணபுதூர் ஊராட்சி மேல் தாமனூர் பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த 12 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என பெண்ணின் பெற்றோர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த இளம் பெண் திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியைச் சேர்ந்த கோபி மகன் சத்தியநாராயணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொர்ந்து, இன்று கிராமிய காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அப்போது இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருவரும் மேஜர் என்பதால் இளம்பெண் தனது காதல் கணவனுடன் செல்வதாக கூறியதால் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!