அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார்: விசாரணை துவங்கியது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில் மீதான பணமோசடி புகார் குறித்து 108 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்தவர் கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் அரசு வேலை வாங்கி தருவதாக 108 பேரிடம் பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அவரது உதவியாளர் பிரகாசம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்
இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்
இதையடுத்து 108 பேரிடம் விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளர்கள் பிரவீன்குமார், சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்க உத்தரவிட்டார்
இது குறித்து டிஎஸ்பி பிரவீன் குமாரிடம் கேட்டதற்கு, அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் உதவியாளர் பிரகாசம் ஆகியோரிடம் பணம் கொடுத்து 108 பேரில் முகவரி தெரிந்த சிலருக்கு மட்டும் தற்போது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் அனைவரையும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்து வருகிறோம்
இதுவரை 15 பேரிடம் விசாரணை செய்து உள்ளோம், மேலும் இதில் அரசு அதிகாரிகள் சம்பந்தபட்டுள்ளார்கள். அவர்கள் முகவரிகள் கிடைத்தவுடன் அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்யப்படும். பெயர் மட்டுமே புகாரில் உள்ளதால் முகவரிகள் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. சிலர் விசாரணைக்கு வர மறுக்கிறார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார்.
முழு விசாரணை முடிந்தவுடன் அறிக்கை சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu