திருப்பத்தூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை

திருப்பத்தூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை
X

முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்த பொதுமக்கள்

திருப்பத்தூர் அருகே முட்புதரில் கிடந்த பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம், வெங்களாபுரம் அடுத்த அனேரி கிராமம் பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் உள்ள முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு சுத்தம் செய்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

தற்போது அக்குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தையை முட்புதரில் வீசியது யார்? என திருப்பத்தூர் கிராமிய போலீஸார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை முள்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story