ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஒருமணி நேரம் பெய்த கனமழை

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஒருமணி நேரம் பெய்த கனமழை
X

ஆம்பூர், வாணியம்பாடியில் ஒருமணி நேரம் பெய்த கனமழை 

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இருந்த நிலையில் திடீரென வாணியம்பாடி, ஆம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, பச்சகுப்பம், மாதனூர், வடபுதுப்பட்டு, ரெட்டிமாங்குப்பம், அழிஞ்சிகுப்பம், உமராபாத், கடம்பூர், தேவலாபுரம், கன்னிகாபுரம், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் கடந்த ஒரு வார காலமாக பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இருந்த நிலையில், மீண்டும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்றும் நிலத்தடி நீர் உயரும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story
ai based agriculture in india