திருப்பத்தூரில் ராட்சத ட்ரோன்  மூலம்  கிருமிநாசினி தெளிக்கும் பணி

திருப்பத்தூரில் ராட்சத ட்ரோன்  மூலம்  கிருமிநாசினி தெளிக்கும் பணி
X

திருப்பத்தூரில் ராட்சத ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பதை கலெக்டர் சிவன் அருள் பார்வையிடுகிறார்.

திருப்பத்தூரில் ராட்சத ட்ரோன்  மூலம்  கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பார்வையிட்டார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிகம் தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் தொடர்ந்து ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் திருப்பத்தூர் முழுவதும் நோய் தொற்று அதிகமாக உள்ளதால் கிருமிநாசினி தெளிப்பதற்காக நகராட்சி சார்பில் பிரத்தியோகமாக ட்ரோன் மூலமாக கிருமிநாசினியை தெளிக்கும் பணியை தொடங்கியுள்ளனர் இதில் முதல் கட்டமாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெறிக்கும பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் இதனை மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் பார்வையிட்டார் இதில் நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!