திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது-போலீஸ் எஸ்.பி .எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பா.ஜ.க,இந்து முன்னணி, விஜய பாரத மக்கள் கட்சி,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளை திருப்பத்தூர் மாவட்ட போலீஸ சூப்பிரண்டு சி.பி. சக்கரவர்த்திவ விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வைத்து, வழிபடுவது கூடாது என்றும், அரசாங்க உத்தரவை பின்பற்றி அவரவர் வீட்டு அருகே சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய பா.ஜ.க,இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தமிழகத்தில் மதுக்கடை, தியேட்டர்கள் உட்பட அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் தாங்கள் விநாயகரை வழிபட்டு ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தமிழக அரசின் அரசாங்க ஆணையை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார்.இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பழனி, திருப்பத்தூர் டி.எஸ்.பி. சாந்தலிங்கம், வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வம், ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu