திருப்பத்தூரில் குடிபோதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்த தந்தை மகன் கைது
திருப்பத்தூரில் குடிபோதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்த தந்தை மகன் கைது
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்த நரசிம்மன் (53), அவரது மகன் புருஷோத்தமன் (30), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், பாலாஜி ஆகியோர் திருப்பத்தூர் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதனை தடுக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் சென்றுள்ளார். அங்கு சென்று அனைவரும் கலைந்து செல்லும்படி அறுவுறுத்தி விட்டு காவல் நிலையம் திரும்பி உள்ளார்.
அப்போது அந்த 4 பேர் மது குடித்து விட்டு காவல் நிலைய வாசலில் தகராறு செய்துள்ளனர். அதனை கண்ட சக காவலர் அதனை செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் திமுக எம்.எல்.ஏ நல்லதம்பி பெயரை சொல்லி காவலர்களை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். தலைக்கேறிய போதையில் தாறுமாறாக பேசிய நான்கு பேரையும் போலீசார் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு செய்த காரணத்திற்காக ஆட்டோ ஓட்டுனர்களின் தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, போலீசாரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தை நரசிம்மன் மற்றும் மகன் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் அதிகளவில் மது குடித்துவிட்டு முகக்கவசம் கூட அணியாமல் காவல் நிலையத்தில் சென்று போலீசாரை அவதூறாக பேசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu