திருப்பத்தூர் அருகே ரூ. 22 கோடி மதிப்பு தங்க நகை பறிமுதல்

திருப்பத்தூர் அருகே ரூ. 22 கோடி மதிப்பு  தங்க  நகை பறிமுதல்
X

திருப்பத்தூர் அருகே மினி வேனில் எடுத்து வந்த ரூ. 22 கோடி மதிப்பிலான தங்க நகைகளுக்கு ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நகைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து வாகனம் விடுவிக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் அறிவித்திருந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தன இந்த நிலையில்

பண பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு உரிய ஆவணம் இன்றி பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்தில் பகுதியில் ராம்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மினி வேன் ஒன்று வந்தது. அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். வாகனம் முழுமையாக பூட்டப்பட்டு இருந்ததால் அதிகாரிகள் திறந்து காண்பிக்க கூறினர்.

அப்போது அதில் வந்த ஓட்டுநர் மட்டும் உடனிருந்தவர்கள் இதில் தங்க நகைகள் உள்ளது எனவும் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன என கூறி உள்ளனர். ஆனால் சம்பவ இடத்தில் அதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்

ஓசூரில் இருந்து தனியார் பாதுகாவலர் உடன் தனியார் நகை விற்பனை நிறுவனத்தின் மூலமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள பிரபல நகைக் கடைகளுக்கு நகைகளைக் கொண்டு செல்லும் வாகனம் எனக் கூறினர்.

அதில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருக்கின்றன தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வருமானவரித் துறையினர் விசாரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அதிகாரிகள் விசாரணை செய்து அந்த நகைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் எடுத்து வாகனம் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்