திருப்பத்தூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

 வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் காமராஜ், கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தனர் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் காமராஜ், கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், திருப்பத்தூர், கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர், ஜோலார்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் பதிவான வாக்குகளை அந்தந்த ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அவையோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு என அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்...

Tags

Next Story
ai automation in agriculture