கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்

கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்
X

திருப்பத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் 

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது வருகிறது மேலும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் .தங்கையாபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அவருடன் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், வட்டாட்சியர் சிவபிரகாசம், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!