திருப்பத்தூரில் மாவட்ட திறன் குழு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூரில் மாவட்ட திறன் குழு   கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
X

மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூரில் மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் இன்று நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்ததாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற 10 ஐடிஐ முடித்த இளைஞர்களுக்கு ஆக்ஸிஜன் உறப் த்தி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான பயிற்சியினை மருத்துவமனையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவப்பணிகள் சார்ந்த குறுகிய கால பயிற்சி வழங்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் அவர்களுடன் ஒருங்கிணைந்து தொழில் பயிற்சி நிலையத்தில் ஐடிஐயில் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுகக் வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து தொழில் பழகுநர் பயிற்சி வழங்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க இளைஞர்களுககு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் என்னதேவை இருக்கின்றதோ அதனை கண்டறிந்து பயிற்சி வழங்க வேண்டும்.

மேலும் மகளிர் திட்ட இயக்குநர் அவர்கள் நமது மாவட்டத்தில் என்ன தேவைகள் என்று கண்டறிந்து அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பற்ற இளைஞாக்ளை ஊக்குவித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அவர்கள் தங்களின் துறையின் மூலம் வரப்பெற்ற மனுக்களில் எத்தனை நபர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தெடுத்து அவர்களின் தகுதிக்கேற்றவாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி, உதவி இயக்குநர் திறன் பயிற்சி அலுவலர் சுகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, துணை இயக்குநர் சுகதாரப்பணிகள் செந்தில், பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!