பீமா கொரேகான் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பீமா கொரேகான் வழக்கில் கைதானவர்களை  விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
X

பீமா கொரேகான் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பீமா கொரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை  விடுதலை செய்யக்கோரி திருப்பத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்டேட் பேங்க் எதிரில் பீமா கொரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் கேசவன் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்.. மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய, சிறுபான்மை, பெண்ணுரிமை, சூழலியல், பண்பாட்டு, முற்போக்கு அமைப்புகள் சார்பில் நடந்த இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில், பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், கொடூரமான ஊபா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவும், தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தீண்டாமை ஒழிப்பு முன்னனி, திராவிட கழகம், அருந்ததியர் பேரவை, பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!