திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் 

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பொன்னுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு ஒப்பந்த தொழிலாளர் மற்றும் டிபிசி தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு உத்தரவுப்படி ரூபாய் 557 வழங்கிடு, தூய்மைப் பணியை ஒப்பந்தம் என்கிற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்காதே, தூய்மை பணியாளர்களுக்கு 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கு, தூய்மைப் பணியாளர் அனைவருக்கும் தளவாட சாமான்கள் வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எக்ஸ் எம் சி பீடி தொழிற்சங்கம் ஜாபர் சாதிக் கூட்டமைப்பு செயலாளர் ஜோதி கூட்டமைப்பு தலைவர் ரங்கன் கூட்டமைப்பு பொருளாளர் ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது