திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
திருப்பத்தூரில் காணாமல்போன செல்போன்கள் மீட்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருடுபோன 100 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது..
சைபர் கிரைம் குழு க்ரைம் காவல் ஆய்வாளர் பிரேமா, உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் குழுவுடன் இயங்கி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மனு ரசீது பதிந்து அதன் விபரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக விசாரணை மேற்கொண்டதில் சுமார் 100 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் மொத்த மதிப்பு 17 லட்சத்து 10 ஆயிரத்து 800 ஆகும் அதனை இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும் இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டுள்ளனர் என தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் அல்லது 24×7 காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி மற்றும் வாட்ஸ்ஆப் எண்: 9442992526 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu