திருப்பத்தூரில் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய வாடிக்கையாளர் தொடர்பு முகாம்

திருப்பத்தூரில் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய வாடிக்கையாளர் தொடர்பு முகாம்
X

திருப்பத்தூரில் அனைத்து வங்கிகளுடன் இணைந்து இந்தியன் வங்கி நடத்திய மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய வாடிக்கையாளர் தொடர்பு முகாம் மூலம் 3 ஆயிரத்து 199 பேருக்கு கடனுதவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து வங்கிகளுடன் இணைந்து இந்தியன் வங்கி நடத்திய மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், 15 தனியார்துறை வங்கிகள் , ஒரு கிராமிய வங்கி , ஒரு மத்திய கூட்டுறவு வங்கி என்று மொத்தம் 26 வங்கிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு விவசாயக்கடன், சிறு , குறு , நடுத்தர தொழில் முனைவோர் கடன் , வீட்டுவசதி கடன், கல்வி கடன், வாகன வசதி கடன் , தனிப்பட்ட நுகர்வோர் கடன் என 3 ஆயிரத்து 199 பேருக்கு ரூ 99 கோடியை 33 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கந்திலி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய இரண்டு பகுதிகளில் நிதி கல்வி மையம் திறந்து வைக்கப்பட்டன இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..

Tags

Next Story