திருப்பத்தூரில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

திருப்பத்தூரில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
X
திருப்பத்தூரில் கொரோனா நிவாரண தொகையாக  ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்

அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 143 ரேஷன் கடைகளில் உள்ள 81 ஆயிரத்து 831 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன

இந்நிலையில் கசிநாயக்கம்பட்டி, திருப்பத்தூர் பேருந்து நிலையம், பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் திருப்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் நல்லதம்பி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்

இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், மாவட்ட ஆட்சியர் சிவனருள்மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!