திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
X

திருப்பத்தூரில் கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


திருப்பத்தூரில் கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர் பூங்கா அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தமிழக முதல்வர் அறிவிக்கும் அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது...

நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, கோமகன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்