உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி வரைவு பட்டியலுக்கான கலந்தாய்வு கூட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலுக்கான கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-௨௦௨௧ வாககுச்சாவடிகளின் வரைவு பட்டியலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்துர் மாவட்டம் புதியதாக தோற்றுவிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு மாநில வார்டு மறுவரையறை ஆணையத்தின் புதிய வார்டு மறுவரையறையின்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021 நடத்திட ஏதுவாக இன்று திருப்பத்துர் மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மாநில் தேர்தல் ஆணையத்தால், வருகின்ற 8 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் மீது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் வரும் 8 ஆம் தேதிக்குள் கலந்தாய்வுக் கூட்டத்தினை நடத்திடுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 208 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய, கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் 1779, கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் 208, ஊராட்சி ஒன்றிய வாரடு உறுப்பினர் பதவியிடங்கள் 125 மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 13 பதவியிடங்களுக்கு தேர்தல்கள் நடத்தும் பொருட்டு, வரைவு வாககுச்சாவடி பட்டியல் குறித்து ஆலோசனைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்
பின்னர் அனைவரின் கருத்துகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல ஆணையத்தின் அறிவுரையின் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவாத்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி, மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu