திருப்பத்தூரில் டாஸ்மாக் மது விற்பனை கண்காணிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருப்பத்தூரில் டாஸ்மாக் மது விற்பனை கண்காணிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் 50 சதவீத பேருந்து இயக்கம் மற்றும் ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தளர்வு காரணமாக பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இன்று முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி கொரோனா நெறிமுறைகளின் பின்பற்றி செயல்படுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும் காவல் துறையுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu