திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், பட்டு வளர்ச்சித்துறை, சர்க்கரை ஆலை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வணிகத்துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, தோட்டகக்கலைத்துறை, கால்நடைத்துறை, சர்க்கரை ஆலை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் வட்டார அளவில் செயல்பாடுகள், அலுவலர்கள், அலுவலகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அலுவலர்கள் பற்றாக்குறைகள் குறித்து உடனடியான அறிக்கை வழங்கிட அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் கூட்டத்தில் புதிய திட்டங்கள், செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். விவாயிகள் பயனடையும் வகையில் குறைந்த செலவில் இலபம் ஈட்டும் வகையில் மாவட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு திட்டங்களை செயல்படுத்தவும், வேளாண் விளை பொருட்களை விளைவிக்கவும் நடவடிக்கை எடுக்க கூறினார்.
மழை பொழிவு குறைவாக கிடைக்கும் பகுதியான மாவட்டத்தில் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசின் கடனுதவிகள் பொருட்கள் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வை வேளாண் அலுவலர்கள் ஏற்படுத்தவும், இத்திட்டத்தை அதிக விவசாயிகள் பயன்படுத்திட நடவடிக்கையினை மேற்கொள்ளவும், வேளாண் சாகுபடி பரப்பளவை கால முறைககு ஏறப் விரிவாகக் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கவும் கூறினார்.
6 வட்டாரங்களில் ஒரு விவசாயி தேர்ந்தெடுத்து அதிகப்படியான விளைச்சலை பெரும் வகையில் அனைத்து விதமான நவீன வேளாண் செயல்முறை பயிற்சி வழங்கி விவசாயி இரட்டிப்பு உற்பத்தி செய்து இலாபம் ஈட்டும் வகையில் தயார் படுத்திட வேண்டும். இதனை தொடர்ந்து மற்ற விவசாயிகளும் ஈடுப்படும் வகையில் திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் வாயிலாக கூறினார் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu