திருப்பத்தூர் அருகே மலைகிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டன

திருப்பத்தூர் அருகே மலைகிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டன
X

திருப்பத்தூர் அருகே மலைகிராம மக்கள்  230 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது

திருப்பத்தூர் அருகே மலைகிராம மக்கள் ஜாதி சான்றிதழ் கோரி போராடி வந்த நிலையில் தற்போது 230 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் நாடு மலை கிராம உள்ளது இங்கு 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதன் சுற்றி உள்ளன. நெல்லிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் வழங்க கோரி அரசு அதிகாரியிடம் முறையிட்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள 400க்கும் மேற்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி சார் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி மலை கிராமத்திற்கு சென்ற வட்டாட்சியர் சிவப்பிரகாசம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் கோரிக்கையை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்தநிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மலைவாழ் மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் மலை கிராமத்திற்கு நேரடியாக சென்று ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த 230 பேருக்கு இன்று ஜாதி சான்றிதகளை வழங்கினர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மலைவாழ் மக்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் இந்த நிகழ்வில் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil