விஷமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர்

விஷமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர்
X

விஷமங்கலம் ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா பதிவேடுகளை ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹாபதிவேடுகளை ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது விஷமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அரசு பதிவேடுகளை முறையாக பராமரிக்க படுகிறதா ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி பகுதியில் உள்ள கண்மாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்..

மேலும் சித்தேரி பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்ற மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின்போது கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீம், சித்ரகலா, ஊராட்சி செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்...

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!