முதியவர்களிடம் மாடிப்படி இறங்கி வந்து மனுக்களை பெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

முதியவர்களிடம் மாடிப்படி இறங்கி வந்து   மனுக்களை பெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
X

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறாத நிலையில் மக்களின் குறைகளை புகார் பெட்டி மூலம் அளிக்க மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி படிப்படியாக நோய் தொற்றானது குறைந்து வரும் நிலையில் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் தங்களுடைய குறைகளை மனுக்கள் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது கணவன்-மனைவியான முதியோர்கள் இருவர் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்க வந்தனர். அப்பொழுது மனுக்களை கொடுக்க மேல்தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் சந்திக்க தள்ளாத வயதில் படியேறி மனுக்களை எடுத்துச்சென்றனர்

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக கீழே இறங்கி வந்து மனுக்கள் கொடுக்க காத்திருந்த அவர்களை நேரடியாக அவர்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக மனுக்கள் மீது அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!