மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
X

குறைநீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெற்றார்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்

இக்கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள் போன்ற 237 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) வில்சன்இராசசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story