திருப்பத்தூர் அரசு மருத்துவமனை ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் : ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் : ஆட்சியர் ஆய்வு
X

ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

கொரோனா இரண்டாவது அலையின் போது தொற்று பாதிக்கப்பட்டவர்களின் சிலிண்டர்கள் கிடைக்காமல் உயிரை இழப்புகளும் அதிகரித்தன இந்த நிலையில் மீண்டும் வராமல் தடுக்க வசதியாக அரசு மருத்துவமனையில் அதிக கொள்ளளவு கொண்ட ஆக்சிசன் உற்பத்தி செய்யும் பிளான்ட்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவு 100க்கும் அதிகமான படுக்கைகள் ஒதுக்கப்பட்டு ஆக்சிஜன் லாரிகள் அவ்வப்போது கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்ற இடங்களை போன்ற நிலை ஏற்படவில்லை.

இருப்பினும் தற்போது மூன்றாவது அலையின் போது மீண்டும் தட்டுப்பாடு ஏற்படாமல் அதனை சரிசெய்ய வகையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் மருத்துவமனையில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாலர்களிடன் கூறிகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள, வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ள காற்றிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. தீவிர இருப்பு வைக்க 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 தொட்டிகள் உள்ளது. இது தவிர காற்றிலிருந்து ஆக்சிஜன் எடுக்கும் மையத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு 330 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். முடிவு இப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டு உள்ளதாக கூறினார்.

இந்த ஆய்வின்போது தலைமை மருத்துவர் குமார்வேல், மருத்துவ அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story
ai in future agriculture