கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம்: கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் கதிரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகின்றார்கள் என செவிலியர்கள் இடம் கேட்டறிந்தார் அதே நேரத்தில் தடுப்பூசி போதியளவு கையிருப்பு உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!