திருப்பத்தூரில் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றும் பணி: கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூரில் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றும் பணி: கலெக்டர் ஆய்வு
X

அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றும் பணி

அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றும் பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டடத்தையும், எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டடத்தை அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடமாடும் மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதையும், எலவம்பட்டி அங்கன்வாடி மையக்கட்டத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சித்ரகலா, எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், துணை தலைவர் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!