திருப்பத்தூரில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூரில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டி: கலெக்டர்  துவக்கி வைத்தார்
X

மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூரில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இணைந்து உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாச்சல் மேம்பாலம் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.

இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி சாந்தலிங்கம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்