திருப்பத்தூரில் குடியரசு தின விழா: மூவர்ணக் கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார்

திருப்பத்தூரில் குடியரசு தின விழா: மூவர்ணக் கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார்
X

குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்

திருப்பத்தூரில் 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஏற்றி வைத்தார்.

பின்னர் காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்துகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய 30 காவலர்களுக்கு நற்பணி பதக்கங்களும், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் கொரானா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கப்பட்டது...

பல்வேறு துறை சார்பில் 395 பயனாளிகளுக்கு 1 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 139 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil