நல்லாசிரியர் விருது: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கினார்
நல்லாசிரியர் விருது வழங்கிய கலெக்டர் குஷ்வாஹா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுகளை அரசுப்பள்ளியில் பணிபுரிந்துவரும் 8 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஆட்சியர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுகளை அரசுப்பள்ளியில் பணிபுரிந்துவரும் 8 ஆசிரியர்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நமது மாவட்டத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவ மாணவர்களுக்கு கதைகளை கூறி பாடங்களை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு எந்த பாடத்தில் விருப்பம் அதிகமாக உள்ளது என கண்டறிந்து அதற்கேறப் பாடங்களை நடத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் ஆர்வம் தூண்டும் விதத்தில் பாடங்களை எடுத்துகூற வேண்டும். என்று கூறினார்
மேலும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பணிபுரிந்து வரும் கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், கசிநாயக்கன்பட்டி தலைமை ஆசிரியர் நா. ஜனார்த்தனன் புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.செலினா, பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) கா.பிரதீப், மேல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை (அறிவியல்) ஜி.கஜலட்சுமி, சிந்தகமணிபெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) அருண்குமார், சின்னவெங்காயப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை செண்பகவள்ளி, ஆம்பூர் பெத்தலகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணன் ஆகிய 8 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது
அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் நலனை கருத்தில்கொணடு பள்ளி மாணவர்கள் முகக்கவசம், அணிய வேண்டும். மாணவர்கள் அனைவரும் கிருமிநாசினி கொணடு அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்
இவ்விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu