திருப்பத்தூர் மாவட்ட தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்ட தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட  கலெக்டர் அமர் குஷ்வாஹா
X

தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், கல்நார்சாம்பட்டி, ஜெயபுரம், பையனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற 13-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் எத்தனை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. என்பது குறித்தும் எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது குறித்தும் கேட்டறிந்தார்.

மருத்துவ குழுவினர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் பொது மக்கள் அறியும்படி அறிவரை வழங்கும்படியும், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உங்கள் ஊராட்சிற்கு குறைந்தபட்சம் 200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் அடைய வேண்டும் என கூறினார்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக கொரோனா தடுப்பூசிகளை பொது மக்களுக்கு வீடுவீடாக சென்று செலுத்தப்பட்டு வருகிறது. இக்கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் 100 சதவிகிதம் பொது மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மருத்துவக்குழுகளுக்கு மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தினார்..

பின்னர் ஜெயபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பிறகு இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கரும்பலகையில் எழுதியுள்ள பாடத்தை படித்து காட்டினார். இந்த ஆய்வுகளின் போது வட்டாட்சியர் பூங்கொடி, வெலகல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் இராமன், கிராம நிர்வாக அலுவலர் அனுமந்தன், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!