திருப்பத்தூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
X

திருப்பத்தூர் தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அதிபெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜங்காலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார்

பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் கொத்தக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்நிம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரெட்டியூர் தொடக்கப்பள்ளி, ஆம்பூர் வட்டம் ஆலங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்

இந்த ஆய்வுகளின் போது எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தடுப்பூசி இருப்பு உள்ளது குறித்தும் கேட்டறிந்தார். தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று செலுத்தப்பட வேண்டும் எனவும் முகாம்களில் இருப்பிலுள்ள தடுப்பூசி அனைத்தையும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

இந்த ஆய்வுகளின். பொது தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள் பூங்கொடி, மோகன், அனந்த கிருஷ்ணன், செயல் அலுவலர் மாலா, பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி, அரசு மருத்துவர் கிரிஷிகா, செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!