போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியூ  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியூ  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ   போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் பணிமனை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேசவன் தொடங்கி வைத்தார்.

அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் , 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் , நிலுவையில் உள்ள பஞ்சப்படி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆறு ஆண்டுகள் வழங்கப்படாமல் உள்ள பஞ்சப் படியை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பணிமனை துணைத் தலைவர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!