காணொளி வாயிலாக கொரோனா தடுப்பு குறித்து தமிழக முதல்வர், திருப்பத்தூர் ஆட்சியரிடம் ஆலோசனை

காணொளி வாயிலாக கொரோனா தடுப்பு குறித்து தமிழக முதல்வர், திருப்பத்தூர் ஆட்சியரிடம் ஆலோசனை
X

தமிழக முதல்வர் காணொளி வாயிலாக கொரோனா தடுப்பு குறித்து  திருப்பத்தூர் ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார்

காணொளி வாயிலாக கொரோனா தடுப்பு குறித்த தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா நோய்தொற்று தீவிரமடைந்து வருகின்றன அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணிகள் மற்றும் ஆக்சிசன் வசதி தேவைகள், மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மருத்துவமனை மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டு விவரித்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்